சென்னை, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம் எழுதி உள்ளார். வணிக ரீதியில் 2000 ரூபாய்க்கு மேல் யுபிஐ கட்டணம் செலுத்துபவர்களிடம் 0.4 சதவீதம் வசூலிக்கப்படும் எனவும், இந்த நடைமுறை அக்டோபர் 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. யுபிஐ வணிக பரிவர்த்தனைக்கு 0.4 சதவீதம் கட்டணம் மூலம் ரூ. 5000-க்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.75,000-க்கு மேல் யுபிஐ பரிவர்த்தனை செய்தால் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படும். யுபிஐ பணப் பரிவர்த்தனை ரெயில்வே, எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் ரூ.2,000-க்கு மேல் ரூ.5 கட்டணம் விதிக்கப்படும். தனி நபர்களுக்கு இடையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.2000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடிதம் எழுதி உள்ளார். அதில், கட்டணமற்ற சேவை அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த கட்டணம், நாடு முழுவதிலும் உள்ள சிறு வணிகர்கள், நெசவாளர்கள் மற்றும் சாதாரண மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். சிறு வணிகர்களின் நலனைக் காக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், யுபிஐ அனைவருக்கும் கட்டணமற்ற சேவையாகவே தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/get-upi-charges-back-immediately-jyotimanis-letter-to-union-finance-minister




