துபாய், நவீன காலகட்டத்தில் மனிதர்களின் திருமணங்களே நிறைய சவால்களை சந்திக்கும் வேளையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படும் பு சுனைதா என்ற பிரபலமான மனித ரோபோவுக்கு திருமணமான செய்தி சமூக ஊடகங்களை அதிரவைத்துள்ளது. அதிலும் அந்த ரோபோ தான் மிக அழகான மோசா என்ற ரோபோவை திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது வைரலாகி வருகிறது. ரோபோ துபாயில் முதல் முறையாக கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எமிரேட்ஸ் டவர்ஸ் அருகே உள்ள சாலையில் மனிதர்கள் நடப்பது போல சர்வ சாதாரணமாக ரோபோ ஒன்று வேகமாக கடந்து சென்றது. அதனை பின்புலத்தில் உரிமையாளர் ஒருவர் இயக்கி வந்துள்ளார். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. டிரெண்டிங் செய்தி அமீரகம் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் டிரெண்டிங் செய்தியாக இந்த ரோபோ மாறியது. இது அமீரக தலைவர்கள் கண்களில் இருந்தும் தப்பவில்லை. இந்த நிலையில் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் அழைத்து அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். ஹுமனாய்டு இது துபாய் எதிர்கால ஆய்வத்தில் உருவாக்கப்பட்ட ஜி-1 என்ற மனித வடிவிலான ஹுமனாய்டு வகை ரோபோ ஆகும். இதற்கு தற்போது பு சுனைதா என பெயரிட்டுள்ளனர். இந்த ரோபோவை எதிர்கால ஆய்வகத்தின் மூத்த ரோபோட்டிக்ஸ் பொறியாளர்கள் டாக்டர் அகமது அல் அத்தார் மற்றும் மைதா அல் கைத்தி ஆகியோர் உருவாக்கி இயக்கி வருகின்றனர். ஆண், பெண் வடிவ ரோபோ இது சீராக நடந்தும், ஓடியும் ஒவ்வொரு அசைவிலும் மனிதர்களை பிரதிபலித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் மனித வடிவில் மனிதர்களின் செயல்பாடுகளை செய்வது போன்று உருவாக்கப்படும் ரோபோக்கள் ‘ஹுமனாய்டு ரோபோ' என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை ரோபோக்கள் ஆண், பெண் வடிவங்களில் உருவாக்கப்பட்டு வருகிறது. சர்ச்சை இதில் தற்போது ‘ரோபோட்டிக்ஸ்' தொழில்நுட்பத்தின் உச்சகட்டமாக திறன் வாய்ந்த ரோபோவாக இந்த பு சுனைதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மீண்டும் கடந்த பக்ரீத் பண்டிகையின் போது வைரலானது. அதிலும் பக்ரீத் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டது சர்ச்சைக்குரிய விவாத பொருளானது. பாரம்பரிய உடை அணிந்து திருமணம் அமீரக பாரம்பரிய கந்தூரா உடையணிந்து பள்ளிவாசலுக்குள் சென்று தொழுகையில் கலந்துகொண்டவர்களின் வரிசையில் தானும் நின்று பங்கேற்றது. தொழுகையில் நிறைவேற்ற வேண்டிய அனைத்து செயல்களையும் இந்த ரோபோ செய்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வீடியோவாக பதிவிடப்பட்டது. கல்வி உள்ளடக்கம் என்ற தலைப்பில் இந்த காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டாலும், வழிபாட்டு செயலில் ஒரு எந்திரம் எப்படி பங்கேற்க முடியும்? என பலரும் வருத்தத்தை பதிவு செய்தனர். இதில் அடுத்தகட்டமாக பிரபலமான பு சுனைதா ரோபோவுக்கு திருமணம் நடந்த நிகழ்வு மீண்டும் சமூக ஊடகங்களை அதிர வைத்துள்ளது. கடந்த 1-ந் தேதி திருமணமானதாக குறிப்பிடும் நிகழ்வில் கருப்பு நிற அபாயா அணிந்த மோசா என்ற ரோபோவுடன் பாரம்பரிய கந்தூரா உடையணிந்த பு சுனைதாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ரோபோவை திருமணம் ‘இறைவனுக்கு நன்றி, இன்று நான் மிகவும் அழகான மோசா ரோபோவை திருமணம் செய்து கொண்டேன்' என்ற பு சுனைதா ரோபோ தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதன் உண்மை பின்னணியில் இது சட்டப்பூர்வமான அல்லது மத ரீதியிலான திருமணம் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. இதனை இயக்கும் நிறுவனம் உருவாக்கிய சுவாரசியமான சமூக ஊடக பதிவு என கூறப்பட்டுள்ளது. ஜென்-சி தலைமுறை இருந்தாலும் அமீரகத்தின் பண்பாடு மற்றும் முக்கிய நிகழ்வுகளை விளம்பரப்படுத்த இந்த ரோபோ பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் திருமணமாகாத ஜென்-சி தலைமுறையினர் ரோபோவுக்கெல்லாம் பெண் கிடைக்கிறது என நொந்தபடி வேடிக்கையாக புலம்புவதையும் காண முடிகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/strange-wedding-in-dubai-marriage-to-famous-humanoid-robot




