சென்னை, பட்டாசு உற்பத்தி அதிகரிக்கும் இவ்வேளையில், இதுபோன்ற கோர விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- அரசியல் ஆதாயம் பட்டாசு தொழிலாளர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் தவெக அரசின் கவனத்திற்கு! விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதறச் செய்கின்றன. கடந்த 2005 ஆம் ஆண்டு தனது திரைப்பட ப்ரோமோஷன்-காக விஜய் பட்டாசு தொழிலாளர்களிடம் அமர்ந்து பேசிய புகைப்படத்தை வைத்து, “பட்டாசு தொழிலாளர்களின் நலன் விரும்பி எங்கள் தலைவர்” என சட்டமன்றத்தில் அரசியல் ஆதாயம் தேடிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தனது சொந்தத் துறையை முற்றிலுமாக கோட்டை விட்டு விட்டார் என்பதற்கான மற்றுமொரு அவலச் சான்று இது. தவெக ஆட்சியில் அமைச்சர்கள் எல்லாம் ரசிகர் மன்றத் தலைவர்கள் போல நடந்து கொள்வது சமூகத்திற்கு நல்லதல்ல. ஆய்வு செய்ய வேண்டும் எனவே, “லஞ்சம் வாங்காமல் லைசென்ஸ் கொடுத்துள்ளோம்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டால் மட்டும் போதாது, பட்டாசு ஆலைகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் அரசு முறையாக ஆய்வு செய்ய வேண்டும்! மேலும், நெருங்கி வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி அதிகரிக்கும் இவ்வேளையில், இதுபோன்ற கோர விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யையும், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-seeks-political-gain-by-exploiting-fireworks-workers-nainar-nagendran



