சென்னை, 75 சதவீத MoU-கள் தி.மு.க. ஆட்சியில் தயார் செய்தவை. இந்த 100 நாட்கள்ல பெரிய புதிய திட்டங்கள் ஏன் வரவில்லை? என்று முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, த.வெ.க. அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். தி.மு.க. ஆட்சியில். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- த.வெ.க. அரசு நடத்திய முதலீட்டாளர்கள் கூட்டம் தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எழுப்பிய கேள்விகள். 75 சதவீத MoU கள் தி.மு.க. ஆட்சியில் தயார் செய்தவை. இந்த 100 நாட்கள்ல பெரிய புதிய திட்டங்கள் ஏன் வரவில்லை? வளர்ச்சிக்கு முக்கியமான பரந்தூர், ஒசூர் விமான நிலையங்கள் அமைப்பதில் இந்த அரசின் முடிவு என்ன. நம்பர் 1: இந்த Conclave விற்கு ஊடகங்களை ஏன் அனுமதிக்கவில்லை. ஏன் இவ்வளவு Secrecy? ஏன், இதுல வர திட்டங்கள் எல்லாமே சென்ற திராவிட மாடல் ஆட்சில நாங்க ரெடி பண்ணினது தான் என்பது ஊடகங்களுக்கு தெரிஞ்சிடும் என்ற எண்ணமா. எதுவாக இருந்தாலும் முதலீடுகளை ஈர்க்கவும் அதை Promotion செய்யவும் Press மிக முக்கியமான ஒன்று. நம்பர் 2: இதுல வந்த MOU-ஸ் களில் கிட்டத்தட்ட ஒரு 75 சதவீதம் திராவிட மாடல் ஆட்சில ரெடி பண்ணி வச்சிருந்த அந்த திட்டங்கள்தான் அப்படின்னு எல்லாருக்கும் தெரியுது. அது உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன். நம்பர் 3: நம்ம "Bullish on TN" லோகோவே மாத்திருக்கீங்கன்னு சொல்றாங்க. எல்லாத்துலயும் ஸ்டிக்கர் ஒட்ட தேவையில்ல. இதெல்லாம் வந்து நாங்க மார்க்கெட் பண்ணி, இவ்ளோ தூரம் Project செய்து, Publicity கொண்டுவந்து வச்சிருக்கோம். அத நம்ம அப்படியே தொடர்ச்சியா நம்ம தமிழ்நாட்டுக்கு யூஸ் பண்றதுல என்ன தவறுன்னு எனக்கு தெரியல. அதுல ஒன்னும் தி.மு.க. பிராண்டிங் எல்லாம் ஒன்றும் நாங்க ஒட்டல. அது தமிழ்நாட்டுக்கான பிராண்டிங். அந்த தமிழ்நாட்டோட பிராண்டிங்க திருப்பி ரீபிராண்ட் (Re-brand) பண்ணி, திருப்பி ரீ-ஸ்டார்ட் (Re-start) பண்ண வைக்காதீங்க. இத்தனை நாள் செய்திருக்கும் அந்த பணிய யூட்டிலைஸ் (Utilize) பண்ணிக்கோங்க. அது அடுத்த கட்டத்துக்கு தமிழ்நாட்ட உயர்த்துறதுக்கு உதவியா இருக்கும். நம்பர் 4: ஆந்திர பிரதேஷ் CM சந்திரபாபு நாயுடு அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு State Investment Promotion Bureau மீட்டிங்க அவரே நடத்தினார். அதுல ரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை கிளியர் பண்றாரு. ஆனா இங்க இன்னும் சென்ற தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்தப்பட்டு முடிக்கப்பட்ட அந்த திட்டங்களோட MOU-ஸ் மட்டும்தான் இன்னைக்கு நீங்க சைன் பண்றீங்க. அதுதான் Predominantly சைன் பண்றீங்க அப்படின்னு சொல்றாங்க. கிட்டத்தட்ட 75% of those MOUs signed today are from. or an outcome of the DMK regime's good work அப்படின்னு சொல்றாங்களே. அப்போ புதிய திட்டங்கள் ஏன் வரல? இந்த 100 நாட்கள்ல ஏன் பெரிய புதிய திட்டங்கள் இன்னும் வரல? நம்பர் 5: ரொம்ப முக்கியமான ஒன்று Infrastructure. இவ்வளோ திட்டங்களும் இங்க வரணும், இன்னும் பெரிய திட்டங்கள்லாம் இங்க வரணும்னா, இன்வெஸ்ட்மென்ட் ரேஸ்ல நமக்கு இன்ப்ராஸ்ட்ரக்சர் ரொம்ப ரொம்ப முக்கியம். ஓசூர் அண்ட் பரந்தூர் ஏர்போர்ட்ஸ் very very critical for Tamil Nadu's industrial growth. இதுல இன்றைய ஆட்சியாளருக்கு என்ன ஸ்டாண்ட் (Stand)ன்றது கிளாரிட்டி இன்னும் வரல. எனவே, திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி காலத்துல தமிழ்நாடு பெற்றிருந்த அந்த வளர்ச்சி தொடர வேண்டுமென்றால், Investment promotion நாம இன்னும் கவனம் செலுத்தணும். நிச்சயமாக மிகப்பெரிய அளவுல புதிய நிறுவனங்கள், புதிய வெளிநாட்டு முதலீடுகள் நம்ம தமிழ்நாட்டுக்கு புதிய இடங்களில் வருவதை நாம் உறுதி செய்வது மிக மிக அவசியம். தற்போதைய முதல்-அமைச்சர் இதுல நிச்சயமாக கவனம் செலுத்தணும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-tvk-governments-decision-regarding-the-establishment-of-airports-at-parandur-and-hosur-trb-rajaa-asks




