சென்னை, தங்கம் விலை கடந்த 5-ந்தேதியில் இருந்து 'டாப்' கியரில் எகிறி வருகிறது. அன்றைய தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.2,160 அதிகரித்து காணப்பட்டது. தங்கம் விலை அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 750-க்கும், ஒரு பவுன் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய விலை நிலவரம் இதன் தொடர்ச்சியாக 4-வது நாளாக தங்கம் விலை இன்றும் ஏற்றம் கண்டடுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,985-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை தங்கத்தை போல ஏற்றம் கண்டுவந்த வெள்ளி விலையில் இன்றும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-rise-for-the-fourth-consecutive-daywhat-is-the-situation-today




