சென்னை, சென்னை பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் ரெயில்களில் தண்டவாள ஓரத்தில் நின்று ரெயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன்கள் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இளைஞர் கைது தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள ஓரத்தில் நின்று ரெயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன் பறித்து வந்த ஹரி பாபு (வயது 24) என்ற இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரி பாபு மீது ஏற்கனவே 25 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஹரி பாபுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-youth-arrested-for-snatching-cellphones-from-train-passengers




