டெப்ரெசென், நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இஸ்ரேல் வீரர்களுடன் அயர்லாந்து வீரர்கள் கைகுலுக்க மறுத்தனர். அயர்லாந்து - இஸ்ரேல் யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து - இஸ்ரேல் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அயர்லாந்து தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் டிராய் பாரட் கோல் அடித்து அயர்லாந்துக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதன்பின்னர் 16-வது நிமிடத்தில் ஆடம் இடா கோல் அடிக்க, அயர்லாந்து 2-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து 25-வது நிமிடத்தில் ஜாக் மொய்லன் 3-வது கோலை அடித்தார். இதனால் முதல் பாதி முடிவதற்குள் அயர்லாந்து 3-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்த முன்னிலையை தக்கவைத்த அயர்லாந்து, இறுதியில் இஸ்ரேலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கைகுலுக்கலை தவிர்த்த அயர்லாந்து இப்போட்டிக்கு முன்பு இரு அணி வீரர்களும் கைகுலுக்கும் நிகழ்வு நடைபெற்றது. கருப்பு பட்டையில் களமிறங்கிய அயர்லாந்து வீரர்கள் போட்டி நடுவர்களுடன் கைகுலுக்கிய நிலையில், இஸ்ரேல் வீரர்களுடன் கைகுலுக்கவில்லை. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/football/nations-league-football-ireland-refused-to-shake-hands-with-israeli-players




