சென்னை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ராகுல் காந்தி வருகை ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் எங்கள் அன்புத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திய்யை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் அறிவித்தபடி, ராகுல் காந்தி ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் வருகிறார். அரசியலமைப்பைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற இலட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தி அவர்களின் இந்த வருகை, தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும். மாணிக்கம் தாகூர் வரவேற்பு தமிழக மக்கள் சார்பிலும், தமிழக காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2029-ல் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rahul-gandhi-to-visit-tamil-nadu-on-august-1-says-manickam-thakur



