டிரினிடாட், கரீபியன் பிரீமியர் லீக் 7 அணிகள் பங்கேற்றுள்ள 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன. செயிண்ட் லூசியா கிங்ஸ் - அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் மோதல் இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வெப்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் அண்ட்ரஸ் கோஸ் 82 ரன்கள் குவித்தார். செயிண்ட் லூசியா கிங்ஸ் வெற்றி இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் அன்டிகுவாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி செயிண்ட் லூசியா கிங்ஸ் அபார வெற்றிபெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/caribbean-premier-league-saint-lucia-beat-antigua




