சென்னை, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து 'ஹாய்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குகிறார். இந்தப் படத்தினை, '7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரௌடி பிக்சர்ஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படப்பிடிப்பு பணிகள் நிறைவு வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 'ஹாய்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ரிலீஸ் தேதி மாற்றம் இந்நிலையில், இப்படம் தள்ளிச்செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷாலின் 'மகுடம்' மற்றும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய திரைப்படங்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதன் காரணமாக திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் தற்போது புதிய வெளியீட்டு தேதியை இறுதி செய்ய படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/nayanthara-kavin-starrer-hi-release-date-changed




