சென்னை, தேனியில் வனப்பட்டா, நிலப்பட்டா வழங்க சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தேனி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம் தொடர்பான பணிகள் முடியும் வரை யாரையும் வெளியேற்ற மாட்டோம் - மாவட்ட கலெக்டர் உறுதியளிப்பு. பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது மனு •உச்ச நீதிமன்றத்தில் மனு: வனப்பகுதி தொடர்பான தீர்ப்பை மறுசீராவு செய்ய தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமசபை •வனப்பட்டா & நிலப்பட்டா வழங்க நடவடிக்கை: வனவுரிமைச் சட்டம் 2006-இன் கீழ் மேகமலை, வருசநாடு உட்பட தேனி மாவட்டம் முழுவதும் உரிமையுள்ள மக்களுக்கு வனப்பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும். தடை •வெளியேற்ற தடை: பட்டா வழங்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை யாரையும் வீடுகளிலிருந்தோ அல்லது நிலங்களிலிருந்தோ வெளியேற்ற மாட்டோம் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். கால்நடை மேய்ச்சல் •கால்நடை மேய்ச்சல் உரிமை: தேனி மாவட்டத்திலுள்ள கால்நடைகள் மேய்ச்சலுக்கு எவ்விதத் தடையும் இருக்காது. மேலும், மேய்ச்சல் நிலங்கள் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்படும். தீர்வு •வனத்துறை தொந்தரவுகளுக்குத் தீர்வு: விவசாயம், போக்குவரத்து போன்றவற்றில் வனத்துறையினரால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க, அடுத்த 1 வாரத்திற்குள் வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் தனிக்கூட்டம் நடத்தப்பட்டுத் தீர்வு காணப்படும். போராட்டம் நிறைவு பெற்றது நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் வனக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததை தொடர்ந்து போராட்டம் நிறைவு பெற்றது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-grama-sabha-meetings-for-forest-and-land-patta-in-theni




