கர்நாடகத்தில் மக்களின் ஆரோக்கியத்தில் கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு சுகாதாரத்துறை தடை விதித்து வருகிறது. குறிப்பாக ரசாயனம் கலந்த உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக ஓட்டல்களில் சோதனை நடத்தி காலாவதியான இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்டவை பயன்படுத்தினால், அந்த ஓட்டல் நிர்வாகம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இவ்வாறு ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில் நட்சத்திர ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி, காய்கறிகளை உணவு சமைக்க பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், செயற்கை முறையில் பன்னீர் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் சுகாதாரத்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தது. பால் பொருளான பன்னீரில் அதிக புரத சத்து இருப்பதால், அதனை மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/one-year-ban-on-artificial-paneer-in-karnataka




