சென்னை, தமிழகத்தில் தற்போது தீவிரமாக செயல்படுத்தப்படும் எண்ணெய் பனை திட்டத்தால் பாமாயில் உற்பத்தி 10,000 டன்னாக உயர்ந்துள்ளது என கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: எண்ணெய் பனை திட்டம் “நாட்டின் 96 சதவீத பாமாயில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் பனை சாகுபடியை ஊக்குவிக்க தேசிய எண்ணெய் பனை திட்டம் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 2018 வரை பனை எண்ணெய் சாகுபடி அதிகமாக இருந்து வந்தது. கஜா புயலால் ஏராளமான எண்ணெய் பனை மரங்கள் பாதிப்புக்குள்ளாயின. அதனால் சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்துவிட்டது. தொடர்ந்து பாமா யில் விலை குறைந்து காணப்பட்டதால் எண்ணெய் பனை சாகுபடியில் தொய்வு காணப்பட்டது. 2,000 ஹெக்டேருக்கு மேல் சாகுபடி தற்போது தமிழகத்தில் எண்ணெய் பனை திட்டம் தீவிரமாக செயல்டுத்தப்படுகிறது. கோத்ரேஜ் நிறுவனம் சார்பில் 10 மாவட்டங்களில் 2,000 ஹெக்டேருக்கு மேல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர கோவை, தேனி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பதஞ்சலி நிறுவனமும், வேலூர், திருவண்ணா மலை ஆகிய மாவட்டங்களில் வைதேகி நிறுவனமும் எண்ணெய் பனை உற்பத்தி மற்றும் கொள்முதலில் ஈடுபட்டு உள்ளன. பனை விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை தஞ்சாவூர் அடுத்த ஈச்சங்கோட்டையில் செயல்படுகிறது. இங்கு தமிழகத்தில் விளையும் மொத்த எண்ணெய் பனையும் அரைக்கப்படுகிறது.” இவ்வாறு கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/impact-of-the-oil-palm-scheme-palm-oil-production-in-tamil-nadu-rises-to-10000-tonnes




