உடுமலை, நீர்ப்பிடிப்பு பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால், அமராவதி அணையின் நீர்மட்டம் 58 அடைய எட்டியது. அமராவதி அணை உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு கேரளம் மற்றும் தமிழக வனப்பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து அளிக்கிறது. மேலும் இந்த அணையை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 29 ஆயிரத்து 387 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் ஆக மொத்தம் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த சூழலில் ஆடிப்பட்டம் சாகுபடிக்காக கை கொடுத்து உதவும் தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டில் முற்றிலுமாக ஏமாற்றி விட்டது. இதனால் நீர்வரத்து நின்று போய் அணை குறைந்தபட்ச நீர் மட்டமே தள்ளாடி வந்தது. 57.91 அடியாக உயர்வு இந்த சூழலில் கடந்த மாதம் 28-ந்தேதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள வனப்பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. தற்போதும் மழை கொட்டித்தீர்த்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. எனவே அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் 29-ந் தேதி முதல் நேற்று வரை 33.37 அடி உயர்ந்து, 57.91 அடியை தொட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 164 கன அடி தண்ணீர் வந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் அணை 88.16 அடியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/incessant-rains-amaravati-dam-water-level-rises-sharply




