மகாராஷ்டிராவில் முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. 2023ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிரிந்த பிறகு கட்சி சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையில் கட்சி தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகிறது. அஜித்பவார் உயிரோடு இருந்தபோது இரு அணிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் அவரது திடீர் மரணம் இந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி இருக்கிறது. இதனால் சரத்பவார் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தார். இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களுடன் சரத்பவார் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால் சரத்பவார் கட்சியில் இருக்கும் 10 எம்.எல்.ஏ.க்களில் சிலர் மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். சரத்பவார் குறிப்பாக சரத்பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் இதில் தீவிரம் காட்டினார். சரத்பவார் காங்கிரஸ் கட்சியில் இணையும் பட்சத்தில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க கூட்டணிக்குச் செல்லவும் தயாராக இருந்தார். இதையடுத்து சரத்பவார் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகத் தெரிகிறது. சரத்பவார் கட்சி எம்பி-க்கள் 6 பேர் பாஜக கூட்டணிக்குத் தாவ முயற்சி? காங். தலைவர் கருத்தால் சலசலப்பு நேற்று இரவு சரத்பவார் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுனில் தட்கர, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் ஆகியோர் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அஜித்பவார் முதல் முறையாக இரு கட்சி தலைவர்களும் சேர்ந்து முதல்வர் பட்னாவிஸைச் சந்தித்துப் பேசி இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், அஜித்பவார் கட்சியுடன் இணைவது தொடர்பாக இப்பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஜெயந்த் பாட்டீல் சரத்பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து இப்பேச்சுவார்த்தை குறித்து விவாதித்துள்ளார். சரத்பவார் கட்சி பா.ஜ.க கூட்டணியில் சேரும் பட்சத்தில் பா.ஜ.க கூட்டணியில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சரத்பவார் கட்சியில் 8 எம்.பி.க்கள் இருக்கின்றனர். ஜெயந்த் பாட்டீல் பா.ஜ.க செயலாளர் வினோத் தாவ்டேயுடனும் இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். ஆனாலும் சரத்பவார் தொடர்ந்து இவ்விவகாரத்தில் மவுனம் சாதித்து வந்தார். எதிர்க்கட்சியில் நீடிப்பது தொகுதி வளர்ச்சி நிதி, நிர்வாக அனுமதிகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதால், சரத்பவார் கட்சியைச் சேர்ந்த பாதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கூட்டணியில் சேர விரும்புவதாக சரத்பவாரிடம் மறைமுகமாகத் தெரிவித்து இருந்தனர். இதனால் மகாராஷ்டிரா அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. உத்தவ் தாக்கரே கட்சியில் ஏற்பட்டது போன்ற ஒருநிலையைத் தவிர்க்க சரத்பவார் முயன்று வருகிறார். டிடர்ஜென்ட், பாமாயில் மூலம் செயற்கை பால் தயாரிப்பு: மகாராஷ்டிரா முழுவதும் 2.3 கோடி லிட்டர் விநியோகம் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/sharad-pawar-to-join-bjp-alliance-ncp-leaders-meet-maharashtra-cm-fadnavis




