பீஜிங், சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியமான திபெத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேபாள எல்லையையொட்டிய பகுதியில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவில் 588 பேர் மாயமாகயுள்ளனர். நேற்று காலை திபெத்தின் க்யிரோங் மாவட்டத்தில் உள்ள க்யிரோங் துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டது. நேபாளப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை 2 பேர்மீட்கப்பட்டுள்ளனர். மண்சரிவில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 588 பேர் மாயமாகி இருப்பதாகவும் சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாள எல்லையையொட்டிய திபெத் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மாயமானவர்களை தேடி மீட்கும் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சாலை சீரமைப்பு, பேரிடர் பாதிப்பு மதிப்பீடு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், விமானப்படை, மருத்துவம், போக்குவரத்து மற்றும் பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த குழுக்கள் அவசர தேவைக்கேற்ப உடனடியாக களமிறங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திபெத்–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உதவி பெறுவதற்கான தொடர்பு விவரங்களை இந்திய தூதரகம் நேற்று வெளியிட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/landslide-in-tibet-550-people-missing-rescue-operations-intensify




