ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘நிஞ்சா’ திரைப்படத்தின் படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா மற்றும் பிரம்மாண்ட பூஜை இன்று தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீபதி சினிமாஸ் வளாகத்தில் நடைபெற்றது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.ஜிவி பிரகாஷ். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த கென் கருணாஸ் இயக்கி நடித்த ‘யூத்’ படத்தின் பாடல்கள் வைரலானது. ‘ஜோ’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் கிரிக்கெட் வீரராக நடிக்கவுள்ளார். ‘நிஞ்சா’ என பெயரிடப்பட்ட புதிய படம் இயக்குநர் முருகு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘நிஞ்சா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் மீண்டும் கதாநாயகனாக புதிய கதைக்களத்தில் களமிறங்குகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பாரத், பிரார்த்தனா நாதன் ‘நிஞ்சா’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் பாரத் மற்றும் பிரார்த்தனா நாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிராத்தனா நாதன் ‘பார்க்கிங்’ மற்றும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றுகிறார். இப்படத்தை சினிஷ் மற்றும் லேஅர்ன் அண்ட் டீச் புரோடக்சன் தயாரிக்கவுள்ளது. படப்பிடிப்பு தொடக்கம் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படமான ‘நிஞ்சா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா மற்றும் பிரம்மாண்ட பூஜை இன்று காலை தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீபதி சினிமாஸ் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தியேட்டரில் நடைபெற்ற படப்பிடிப்பு விழா தமிழ் திரையுல வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு புதிய திரைப்படத்தின் தொடக்கப் பூஜை மற்றும் விளம்பர நிகழ்ச்சி ஒரு சினிமா தியேட்டருக்குள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொதுவாக படப்பிடிப்பு தளங்கள், ஸ்டூடியோக்கள் அல்லது கோயில்களில் மட்டுமே நடத்தப்படும் பூஜை விழா, இந்த முறை தஞ்சை மக்களின் நேரடிப் பங்கேற்புடன் ஸ்ரீபதி தியேட்டர் இருக்கைகளில் படக்குழுவினர் அமர்ந்திருக்க, ரசிகர்களின் ஆரவாரத்துடன் வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டது. படப்பிடிப்பு நிலவரம் இன்று காலை தஞ்சை ஸ்ரீபதி தியேட்டரில் நடைபெற்ற விசேஷ பூஜை விழாவில் ஜி.வி.பிரகாஷ் குமார், பிராத்தனா நாதன், ஷான் ரோல்டன், இயக்குநர் முருகு மற்றும் தயாரிப்பாளர் சினிஷ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் தியேட்டர் இருக்கைகளில் அமர்ந்து விழாவை சிறப்பித்தனர்.இந்த நிகழ்வை தொடர்ந்து, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. வித்தியாசமான முறையில் தொடங்கியுள்ள ‘நிஞ்சா’ திரைப்படம், அடுத்த ஆண்டு (2027) திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Taking the spotlight at the Pooja Ceremony of Ninja ❀ K.S. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/gv-prakashs-ninja-film-shooting-begins
