துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனித்துவமான நடிப்பு மற்றும் கதைத்தேர்வுகளால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் துல்கர் சல்மான். தமிழ் ரசிகர்களிடையே ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓகே கண்மணி’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் பெற்ற அவர், சமீபத்தில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தார். அவர் நடித்த ‘ஐயம் கேம்' திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற நேரடி தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தில் பூஜா ஹெக்டே இதற்கிடையில், இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது இப்படத்தின் முதல் பாடலான 'வானே வானே' பாடலை வெளியிட்டுள்ளனர். தரண் கே எழுதிய இப்பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நகுல் அபயங்கர் பாடியுள்ளார். படப்பிடிப்பு நிறைவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுமையாக நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு படக்குழுவினரும், நடிகர் துல்கர் சல்மானும் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடினர். படத்தின் ரிலீஸ் அப்டேட் இந்த நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படம் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/dulquer-salmaans-sri-sri-film-release-date-update




