சர்வதேச இயற்பியல் கோட்பாடு மையம், இயற்பியல் துறையில் சிறப்பாக பங்காற்றியவருக்கு வழஙகும் 'டிரக் பதக்க' (ICTP 2026 DIRAC MEDAL) விருது இந்திய விஞ்ஞானி தீபக் தார்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் ஆய்வு ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகள் பெற்றுள்ள இந்த விருதுக்கு இந்திய விஞ்ஞானி தேர்வு செய்யப்பட்டுள்ளது, இந்திய அறிவியல் அறிஞருக்கு கிடைத்த கூடுதல் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் உள்ள சர்வதேச அறிவியல் கோட்பாடு மையத்தில் விஞ்ஞானியாக உள்ள தீபக் தார் புள்ளியியல் இயற்பியல் மற்றும் சிக்கலான அமைப்புகள் தொடர்பான ஆய்வுகளில் சிறப்பாக பங்களித்து வருகிறார். உத்தரப்பிரதேசத்தில் பிறந்த தீபக் தார் தாய்மொழி வழியில் பள்ளிக்கல்வி கற்று, அறிவியல் ஆய்வுகள் மீதான ஆர்வத்தில் அலகாபாத் பல்கலைக்கழகம், கான்பூர் ஐஐடி-யில் உயர் கல்வி கற்றார். அமெரிக்காவின் கால்டெக் நிறிவனத்தின் உதவித் தொகையைப் பெற்று அங்கு புகழ்பெற்ற இயற்பியலாளர் ரிச்சர்ட் பெயின்மேனுடன் சேர்ந்து பணியாற்றி 1978-ல் டாக்டர் பட்டம் பெற்றார். விஞ்ஞானி தீபக் தார் அதன்பின்பு அமெரிக்காவில் பெரிய நிறுவனங்களில் கிடைத்த வாய்ப்புகளை மறுத்து இந்தியா வந்தவர் மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார். பின்பு, புனேயில் 8 ஆண்டுக்ள் பேராசிரியராக பணியாற்றி பல மாணவர்களை இயற்பியல் ஆய்வாளர்களை உருவாக்கினார். அவருடைய அறிவியல் பங்களிப்புக்காக சர்வதேச போல்ட்ஸ்மேன் விருதும், இந்தியாவின் உயர்ந்த விருதான பத்மபூஷணும் ஏற்கனவே வழஙகப்பட்டது. தற்போது தீபக் தார் உடன் புள்ளியியல் இயற்பியல் தொடர்பான ஆய்வுகளில் சிறப்பான பங்களிப்பை செய்துவரும் பிரான்ஸ் நாட்டின் பேராசிரியர் பெர்னாட் டெரிடா, இத்தாலியின் பேராசிரியர் மார்க் மெசார்டு, இஸ்ரேலின் பேராசிரியர் ஹைம் சோம்போலின்ஸ்கி ஆகியோருக்கும் இவ்விருது பகிர்ந்து அளிக்கப்படுவதாக இத்தாலியில் செயல்பட்டு வரும் சர்வதேச இயற்பியல் கோட்பாடு மையம் அறிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/science/international-award-announced-indian-scientist




