புதுடெல்லி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-அணுசக்தி துறையைப் போலவே விண்வெளித் திட்டத்திலும் மோடி அரசு தீவிரமான தனியார்மய மாக்கல் கொள்கையை கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கான உந்துதல் நேரடி யாக பிரதமரிடம் இருந்தும், அவரது அலுவலகத்தில் இருந்தும் வருகிறது என்பதும் வெளிப்படை.ராக்கெட்டுகளை உருவாக்குதல் மற்றும் கட்ட மைப்பதில் இஸ்ரோவின் பங்கை வெகுவாகக் குறைப்பதற்கும், அதே வேளையில் செயற்கைக்கோள் தொடர்பான அதன் பெரும்பாலான சொத்துக்களை முழுமையாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரோ சுமார் ரூ. 1,000 கோடி முதலீடு செய்து தமிழ்நாட்டில் அமைத்து வரும் 2- வது விண்வெளி ஏவுதளமும் ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மாறிவரும் சூழலை கருத்தில் கொள்ளும் போது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்த ஊகங்கள் மட்டுமே எழுகின்றன. இஸ்ரோ இந்தியாவுக்குப் பெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளது. பிரதமரே பல சந்தர்ப்பங்களில் அதன் புகழின் மூலம் பெருமை அடைந்தார். விண்வெளித் துறை சார்ந்த புதிய நிறுவனங்கள் நிச்சயமாக ஊக்கத்தையும் ஆதரவையும் பெறத் தகுதியானவைதான். பலவீனம் ஆனால், தனியார் துறையுடன் நீண்ட காலமாகப் பயனுள்ள மற்றும் வெற்றிகரமான கூட்டுறவைப் பேணி வந்த இஸ்ரோ, இப்போது ஏன் பலவீனப்படுத்தப்பட்டு அதிகாரமற்றதாக மாற்றப்படுகிறது? கடந்த சில மாதங்களிலேயே, இஸ்ரோவின் 100 முதல் 120 வரையிலான முக்கிய நிபுணர்கள் தங்கள் பணிகளை விட்டு வெளியேறி உள்ளனர். ஒருவேளை வரவிருக்கும் சூழல் குறித்த முன்அறிதல் அவர்களுக்கு இருந்திருக்கலாம்.பிரதமரால் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க.வில் இணைந்த இஸ்ரோவின் முன்னாள் தலைவர்களில் ஒருவரே, இஸ்ரோ தொடர்பான இந்த புதிய தனியார் மயமாக்கல் முயற்சி குறித்து இப்போது தீவிர சந்தே கங்களை வெளிப்படுத்தி உள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தனியார் மயமாக்கல் கொள்கை மூலம் மோடி அரசு இஸ்ரோவின் வலிமையை குறைக்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/central-government-is-crippling-isro-congress-alleges




