கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து சாதனை படைத்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாத தால் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது. இதனால் விவ சாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிக்கிறார்கள். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு குறுவை நிவார ணமாக ரூ.25 ஆயிரம் அறிவிக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரீமியம் தொகையை அரசே செலுத்தி முழு காப்பீடு கிடைக்க உதவி செய்ய வேண்டும். ஆர்ப்பாட்டம் சம்பா சாகுபடிக்கான மறுமுதலீடாக விதை, உரம், பூச்சிக்கொல்லி என இடுபொருட்கள் மானியம் வழங்க வேண்டும். விவசாய கடன்களை முழு மையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகி றார். முதன்மை செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரு மான கே.என்.நேரு வரவேற்று பேசுகிறார்.இதில் மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஜவாஹி ருல்லா எம்.எல்.ஏ., மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமி முன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-holds-a-protest-demonstration-in-thanjavur-today-condemning-the-tvk-government




