சென்னை, தங்கம் விலை இன்று ஏற்றம் கண்டுள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்ற, இறக்கம் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 25-ம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 10-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை இதற்கிடையில், நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து ஒரு பவுன் ரூ.1,09,120-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.13,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை இந்த நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,680க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,710-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 மற்றும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து, தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-rise-again-shock-for-jewelry-lovers




