கோவை, சுதந்திர தின விழாவையொட்டி கோவை விமான நிலையத்துக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையம் நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விமான நிலையங்களுக்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. பார்வையாளர்கள் செல்ல தடை இதன் காரணமாக தினமும் ஏராளமான பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். அவர்களை அழைத்துச்செல்லவும், அனுப்பி வைக்கவும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் வருகிறார்கள். அவர்கள் டிக்கெட் எடுத்து பார்வையாளர்கள் வசதி உள்ள பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுதந்திர தின விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருவதால், கோவை விமான நிலையத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முழு ஒத்துழைப்பு இது குறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மறு உத்தரவு வரும் வரை கோவை விமான நிலையத்துக்குள் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கான நுழைவு சீட்டு, பிரத்யேக பாஸ் வழங்கப்பட மாட்டாது. இந்த அறிவிப்புக்கு பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/visitors-banned-from-entering-coimbatore-airport-for-independence-day-celebrations




