திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்குள் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில், 25 அடி உயரத்தில், 66 மீட்டர் நீளமும், 66 மீட் டர் அகலமும் கொண்ட லட்சுமி தீர்த்த குளம் அமைந்துள்ளது. புராண வரலாற்று காலத்தில் தெய்வானை அம்பாளுக்காக இந்த தீர்த்த குளம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்பு இந்த குளம் வற்றாத புனித தீர்த்த குளமாக இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து குளத்தில் உள்ள தண்ணீரை கைகளில் அள்ளி தலையில் தெளித்து செல்வது வழக்கம். பின்னர் கோவிலில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர் குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி வாங்கி போட்டு மகிழ்ந்து வந்தனர். குறிப்பாக தோல் பிரச்சினை உள்ளவர்கள் குளத்தில் உப்பு, மிளகு வாங்கி போட்டால் நோய் குணமாகிவிடும் என நம்புகின்றனர். எனவே, குளத்தை பக்தர்கள் புனிதமாக கருதி வந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த லட்சுமி தீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து 3 முறைக்கு மேல் இடிந்தது. மேலும் குளத்தில் தண்ணீர் வற்றியது. இதனால் தீர்த்தகுளத்தை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து ரூ.6 கோடியே 50 லட்சத்தில் பழமை மாறாமல் குளம் சீரமைக்கப்பட்டது. பின்னர் புதுப்பிக்கப்பட்ட தெப்பக்குளத்தை அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து குளத்தில் தெளிந்த நீர் நிரப்பப்படும், மீன் குஞ்சுகள் வளர்க்கப்படும், முறையாக பராமரிக்கப்படும் என பக்தர்களிடையே எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தற்போது தீர்த்த குளத்திற்குள் புற்கள் அதிக அளவில் வளர்ந்து காட்சியளிக்கிறது. மேலும் குளத்தை பராமரிக்காத நிலையே தொடர்ந்தது. தற்போது குளத்தின் உள்பகுதி முழுவதுமாக பச்சை பசேலென்று புற்கள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. எனவே, குளத்தை சீரமைக்க வேண்டும் எனவும், தொடர்ந்து பராமரிக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruparankundram-temples-sacred-tank-turns-into-a-grassy-patch




