ஆதவ் அர்ஜுனா ``வைக்கம் ஆறுக்குட்டியில் பெரியார் சிறையிலிருந்த நினைவாக அங்கே நினைவுச் சிறைச்சாலை கட்ட கேரள அரசுடன் பேசி வேலையை தொடங்கினோம். ஆனால், இப்போது அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி அமைச்சரின் விளக்கத்தை வேண்டுகிறேன். பெரியாரை கொள்கைத் தலைவர் என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தவெக, கோவையில் கட்டப்பட்ட பெரியார் நூலகத்தை இன்னும் திறக்கவில்லை." என எ.வ வேலு பேசினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ், ``தம்பட்டம்.தம்பட்டம் என பேசுவது தேவையில்லாதது. எங்கள் கட்சி அலுவலகத்தில் பெரியார் சிலையும் அம்பேத்கர் சிலையும் இருக்கிறது. அறிவாலயத்தில் பெரியார் சிலை எங்கே?" என்றார். சட்டமன்றத்தில் இன்றைய நிகழ்வின் போது பேசிய அமைச்சர் நிர்மல் குமார், 'உலக தமிழர்களுக்கான முதல் குரல் முதல்வர் விஜய்யுடையதுதான். கர்நாடக காவல்துறையால் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் கர்நாடகா அரசு நேர்மையாக விசாரணை நடத்துவோம் என உறுதியளித்திருக்கிறது." என்றார், மேலும் கடலூர் பரங்கிப்பேட்டை ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்படுவது பற்றி அவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ்வின் பதில். ``இத்திட்டத்தினால், சுற்றுச்சூழல், கடல்சார் உயிரினங்கள் மற்றும் மீன்வளம் ஆகியவற்றிற்கு ஏற்படக்கூடிய அனைத்து பாதிப்புகளையும் கூர்ந்தாய்வு செய்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் இந்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்." எனத் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/government-and-politics/assembly-session-live-updates-dated-18-08-2026




