சென்னை, ‘வட்டி காசுலவாடா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகர் ரவிமோகன் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் ரவி மோகன், திருப்பதி ஏழுமலையானாக சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கைவசம் இருக்கும் படங்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், தற்போது ‘கராத்தே பாபு’, ‘ஜீனி’, ‘பென்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. 46-வது பிறந்தநாள் இதற்கிடையில், ரவி மோகன் நேற்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில், ரவி மோகன் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் ‘வட்டி காசுலவாடா’ படக்குழுவினரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்காக படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் வேடத்தில் ரவி மோகன் ‘ஓம் நமோ வேங்கடேசாய’ என்ற ஆன்மிக வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டரில், மனிதக் கரத்தைப் பிடித்தபடி இருக்கும் பெருமாளின் கரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தில் ரவி மோகன், திருப்பதி ஏழுமலையானாக சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தெலுங்கு திரையுலகில் அவர் புதிய பரிமாணத்தில் அறிமுகமாகிறார். பான்-இந்தியா படமாக உருவாகிறது தேஜ் உப்பலபாடி இயக்கத்தில், ஏ.கே. என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏடிவி ஒரிஜினல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது. நடிகர் மஞ்சு மனோஜ் இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். நகைச்சுவை, உணர்வுபூர்வமான குடும்ப பின்னணி மற்றும் நடுத்தர வர்க்க வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/ravi-mohan-making-his-telugu-cinema-debut-and-in-a-role-like-this




