தூத்துக்குடி, தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகர் செயற்பொறியாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று (8.7.2026, புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இதன் காரணமாக மடத்தூர், மடத்துர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தினநகர், அசோக்நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ்நகர், சின்னமணிநகர், 3வது மைல், புதுக்குடி, டைமண்ட் காலனி, EB காலனி, ஏழுமலையான்நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலை தொடர்பு குடியிருப்புகள் ராஜகோபால்நகர், பத்திநாதபுரம், சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன்நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாதநகர், சில்வர்புரம், சுப்புரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர்நகர், ராஜரத்தினநகர், பாலையாபுரம், வி.எம்.எஸ்.நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜிநகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதிநகர், பால்பாண்டிநகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ்நகர், N.G.O.காலனி, அன்னைதெரசாநகர், பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2 வது மற்றும் 3 வதுதெரு, கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதிநகர், புதூர்பாண்டியாபுரம் மெயின் ரோடு, கிருபைநகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், கல்லூரிநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், எட்டையபுரம் ரோடு வடபகுதி, டிமார்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/monthly-maintenance-work-power-outage-in-thoothukudi-today-2




