ஈரோடு, உள்ளூர் விடுமுறை சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளான வருகிற 3-ந்தேதி அன்று, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும். வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற ஆகஸ்ட் 22-ந்தேதி அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் விடுமுறை அல்ல என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளான வருகிற 3-ந்தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiran-chinnamalai-memorial-day-local-holiday-on-aug-3-in-erode-district




