சென்னை, தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 4 பேர் கைது இந்நிலையில், சென்னை கோவிலம்பாக்கத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் இன்று சோதனை நடத்தினர் சோதனையில் வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சபியுல் இஸ்லாம் (வயது 18) என்ற இளைஞர் உள்பட திரிபுராவை சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து 15 கிலோ கஞ்சா மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கஞ்சா சப்ளை செய்த துஷார் உசேன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/north-indian-gang-arrested-for-ganja-sale-in-chennai




