செங்கல்பட்டு, மதுராந்தகம் தவெக பிரசார கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது; தேர்தலுக்கு முன் முதல்-அமைச்சர் விஜய் 10 மீட்டிங் தான் பேசினார். திமுக தலைவர், திமுக ”பொதுச்செயலாளர், பொருளாளரின் மகன் தோற்றுவிட்டனர். திமுக தலைவர்கள் முதல் 15 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். 1931-க்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் தீர்மானத்தை விஜய் கொண்டு வந்தார்; திமுக ஏன் கொண்டுவரவில்லை? ஜெம் வீரமணி மீது குற்றச்சாட்டில் எப்.ஐ.ஆர். போட்டு, வழக்கை முடிக்க முயற்சித்தனர். ஆனால் ஒரு ஏடிஜிபி, காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுத்தவர் முதல்-அமைச்சர் விஜய். வீரமணி வழக்கு பற்றி தவெக பேசக்கூடாதா? நாங்கள் பேசக்கூடாது என திமுக நீதிமன்றம் சென்றுள்ளது. திமுக ஆட்சியில் வீரமணி வழக்கு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? திமுக ஆட்சியில் ஏன் வழக்கு முடித்துவைக்கப்பட்டது என்பதற்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். அதன் பின்னணியில் அழுத்தம் கொடுத்தது யார்? பின்னணியில் நடந்த பணபரிவர்த்தனை யாருக்கு சென்றது? பெண்கள் பாதுகாப்பில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சமரசம் செய்வதே இல்லை. தவெக வேட்பாளரை விலைக்கு வாங்கி எடப்பாடியில் வெற்றிபெற்றவர் எடப்பாடி பழனிசாமி. காணாமல் போன தவெக வேட்பாளர் அருண் குமார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். மதுராந்தகம் தொகுதியில் தவெக பெறும் வெற்றி 25 ஆண்டுகளுக்கான வெற்றியாக மாற வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-will-not-compromise-on-womens-safety-minister-aadhav-arjuna




