அமெரிக்க நிறுவனங்கள் எதிர்ப்பு ரூ.2 ஆயிரம்வரையிலான யு.பி.ஐ. பரிமாற்றத் துக்கோ அல்லது ருபே டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிமாற்றத்துக்கோ வங்கி கள் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஆனால், ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பரிமாற்றத்துக்கு வர்த்தகர்கள் கட் டணம் செலுத்த வேண்டுமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.இந்நிலையில், இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தகர் தள்ளுபடி விகிதம் பூஜ்ஜியமாக இருக் கும் கொள்கைக்கு அமெரிக்க நிறுவனங்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது, மோடி அரசு அந்த கொள்கையை மாற்றி, யு.பி.ஐ. பரிமாற்றத்துக்கு கட்டணம் விதிக்க பாதையை திறந்து விட்டுள்ளது. அழுத்தத்துக்கு பணிந்தார் இனிேமல், ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வர்த்தக யு.பி.ஐ. பரிமாற்றத்துக்கு எம்.டி.ஆர். விதிக்க முடியும். அந்த பரிமாற்றங்கள். மொத்த அளவில் 5 சதவீதமாக இருந்தாலும், மொத்த பரிமாற்ற மதிப்பில் 65 சதவீதமாக இருக்கும்.வாடிக்கையாளர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று மத் திய அரசு கூறுகிறது. ஆனால், கடைக்காரர்களுக்கு விதிக்கப்படும் கட்ட ணம் எங்கிருந்து வரும்? விலை உயர்த்தப்பட்டு, இறுதியில் வாடிக்கையாளர்களின் பாக்கெட்டில் இருந்து நோடியாக பெறப்படும்அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைப் போல், சமரச பிரதமர், அமெரிக்கா வின் அழுத்தத்துக்கு மீண்டும் பணிந்து விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். டிரம்பை திருப்திப்படுத்த. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-யு.பி.ஐ.க்கு கட்டணம் வசூலிப்பதற்கான பணிகளை தொடங்க நாடாளு மன்றம் மூலம் இயற்றப்பட்ட புதிய சட்டங்களை மத்திய அரசு பயன்படுத் துகிறது. யு.பி.ஐ. பரிமாற்றங்களுக்கு நாம் அனைவரும் கட்டணம் செலுத்த பாதை போடப்பட்டு விட்டது.நாளை இந்த உச்சவரம்பு மாற்றப்படலாம். தனிநபர்களுக்கு இடையிலான அன்றாட பரிமாற்றத்துக்கும் கட்டணம் அறிமுகப்படுத்தப்படலாம். நேர்மை யும், வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், பயனர்களின் நம்பிக்கையை மத்திய அரசு நொறுக்கி விட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை திருப்திப்படுத்த அமெரிக்க கம்பெனிக ளுக்கு டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை திறந்து விடத்தான் இவையெல்லாம் நடத்தப்படுகிறதா? இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/upi-issue-pm-modi-has-yielded-to-us-pressure-rahul-gandhi-alleg




