சென்னை, குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ‘பிளாஸ்ட்’ படத்திற்காக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் சிறப்புப் போஸ்டர் வெளியிட்டு ரசிகர்கள், ஊடகங்கள், படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுபாஷ் கே ராஜ், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. மேலும், கேஜிஎப் படத்தின் இசையமைப்பாளரான ரவி பசூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, ஜான் கொகேன், பவன், திலீபன் என பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். முழுமையான ஆக்சன் திரைப்படமாக உருவான இந்தப் படத்தில், கராத்தே தெரிந்த அர்ஜுன் குடும்பம் எப்படி வில்லன்களுடன் மோதுகிறார்கள் என்பதை மையப்படுத்தி விறுவிறுப்புடன் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கடந்த மே 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், ‘பிளாஸ்ட்’ திரைப்படம் உலகளவில் ரூ. 76 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளதாக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வாக அறிவித்துள்ளது. ‘பிளாஸ்ட்’ திரைப்படம் கடந்த ஜூன் 25ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரூ.18 கோடியில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வசூலில் 4 மடங்கு அதிகமாக அதாவது ரூ. 76 கோடி ஈட்டியுள்ளது. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள இந்தப் படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் சிறப்புப் போஸ்டர் வெளியிட்டு ரசிகர்கள், ஊடகங்கள், படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/arjuns-blast-movie-grosses-4-times-more




