பர்மிங்காம், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப், போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிரடி சதம் விளாசிய கையோடு, அங்கிருந்து சுமார் 7,000 கி.மீ. பயணம் செய்து நேரடியாக இங்கிலாந்து புறப்பட்டு வந்த சைம் அயூப், இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டக் அவுட் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சைம் அயூப், முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 453 ரன்கள் குவித்தது. இதன் மூலம் பாகிஸ்தானை விட 320 ரன்கள் முன்னிலை பெற்றது. சைம் அயூப் 320 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் தொடக்கத்திலேயே அதிர்ச்சி ஏற்பட்டது. சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷபீக் ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் அபாயத்தில் சிக்கியநிலையில், பின்னர் களமிறங்கிய வீரர்களின் பொறுப்பான ஆட்டம் மற்றும் அறிமுக வீரர் ரசாவுல்லாவின் அதிரடி காரணமாக பாகிஸ்தான் அணி சரிவில் இருந்து மீண்டது. 449 ரன்களுக்கு ஆல்-அவுட் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் 96.4 ஓவர்களில் 449 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் 320 ரன்கள் பின்தங்கியிருந்த பாகிஸ்தான், 2-வது இன்னிங்ஸில் அந்தப் பின்னடைவைக் கடந்து 129 ரன்கள் முன்னிலை பெற்றது. 130 ரன்கள் இலக்கு இதன் மூலம் 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 130 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/cricket/he-came-from-a-distance-of-7000-km-he-got-a-duck-in-both-innings-if-he-gets-cut-his-salary-will-be-in-lakhs




