டோக்கியோ, 45 நாடுகள் பங்கேற்றுள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகா ணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 12-வது நாளான நேற்று இந்தியாவுக்கு மறக்க முடியாத, மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. வில்வித்தையில் 3, துப்பாக்கி சுடுதலில் 1 என ஒரே நாளில் இந்தியா 4 தங்கப்பதக்கத்தை வென்று பிரமிக்க வைத்தது. 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று மகளிர் அணிகள் பிரிவு ஸ்குவாஷ் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஹாங்காங்கிடம் 1–2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. முதல் போட்டியில் அனஹத் சிங் 2–3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். தொடர்ந்து தன்வி கண்ணா 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவை சமநிலைக்கு கொண்டு வந்தார். ஆனால் மூன்றாவது போட்டியில் அனுபவம் வாய்ந்த ஜோஷ்னா சின்னப்பா 0–3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால், இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு முடிவுக்கு வந்தது.இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் அணி, வெண்கலப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தது. கடுமையாகப் போராடிய இந்திய வீராங்கனைகள் அரையிறுதியில் தோல்வியடைந்தாலும், தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/sports/othersports/asian-games-bronze-for-india-in-squash




