திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால்' என்கிற கடல் உணவுப்பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த மாதம் 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பலர் ஆஸ்பத்திரி களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. தற்போது 14 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், தொழிற்சாலையில் பணியாற்றிய ஒடிசா, அசாம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் புனித பீட்டர் பால்' என்கிற கடல் உணவுப்பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இங்கு கடந்த மாதம் 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பலர் ஆஸ்பத்திரி களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. தற்போது 14 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், தொழிற்சாலையில் பணியாற்றிய ஒடிசா, அசாம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 மண்டலங்கள் பணிகள் நடைபெறும் பகுதி 300 மீட்டர் சுற்றளவில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும். தொழிற்சாலையை சுற்றிய 500 மீட்டர் சுற்றளவிற்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு கருதி பணிகள் 3 மண்டலங்களாக (ஜோன் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டன. முதல் மண்டலத்தில் 16 தொழில்நுட்ப வல்லுநர்கள் அமோனியா வாயுவை டேங்கர் லாரிக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர். 2-வது மண்டலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3-வது மண்டலத்தில் மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் இருந்தனர். 2வது நாள் பணி தொடக்கம் நேற்று மாலை வரை 3 டேங்குகளில் இருந்த சுமார் 2 டன் அமோனியா வாயு முழுமையாக டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டது. தொழிற்சாலையில் உள்ள டேங்குகளில் இருந்து தொழிற்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் குழாய்கள், வால்வுகள் உள்ளிட்டவற்றில் எஞ்சியுள்ள அமோனியா வாயுவை சேகரித்து மீண்டும் டேங்கிற்கு கொண்டு வந்து, பின்னர் லாரிக்கு மாற்றும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த பணி மாலைக்குள் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலையில் மீதம் உள்ள 2 டன் அமோனியாவை பாதுகாப்பாக அகற்றும் பணி 2வது நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் காரணமாக ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் இருந்து பெரியபாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளன. இன்றும் 2-வது நாளாக இதே போக்குவரத்து மாற்றம் அமலில் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/work-to-safely-remove-ammonia-from-factory-begins-for-2nd-day



