நீலகிரி, நீலகிரி மாவட்டம் குன்னூர் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீஸ் சார்பில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயிலில் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி பேசுகையில், நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், ஓடும் மலை ரெயிலில் ஆபத்தான முறையில் செல்பி எடுக்கக்கூடாது, முன், பின் தெரியாத நபர்களிடம் இருந்து தின்பண்டங்கள் மற்றும் உணவு வாங்கி சாப்பிட கூடாது. ரெயில் அல்லது ரெயில் நிலையத்தில் உரிமை கோரப்படாத மர்ம பொருட்கள் கிடந்தால், அதை தொடாமல் உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/tourists-advised-against-taking-selfies-in-a-dangerous-manner-on-the-mountain-train




