சென்னை, தி.மு.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகியதால் வைகோ மீது தி.மு.க. சார்பில் கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வைகோ வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு, அதற்கு மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக்கொண்டு 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று தி.மு.க.வினர் வலியுறுத்தித் திணித்தார்கள். கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, தி.மு.க.வையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியில் இருந்து விலக்கி இருப்பார்கள். இரண்டு பெருந்தவறுகள் என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006-ல் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய ம.தி.மு.க தலைமை நிர்வாகிகள், முன்னணி யினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அ.தி.மு.க. பொதுச்செயலாளரை (ஜெயலலிதா) சந்திக்க வைத்தார்கள். நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், இருந்திருந்தால் நமது இயக்கம் வலிவும். பொலிவும் பெற்றிருக்கும். இனி நமக்கு தோல்வி இல்லை 2017-ல் பா.ஜனதாவை எதிர்ப்பதற்காக தி.மு.க.வுடன் உடன்பாடு கொண்டது 2-வது பெரும் பிழையாகும். பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரி யான முடிவுகளை இன்றைய அரசியலில் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது. நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு. ஓங்கி உயர்ந்து தலை நிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. இனி நமக்கு தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிம யமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/dmk-alliance-with-aiadmk-i-made-big-mistakes-in-my-life-vaiko




