லக்னோ, வங்கி ஊழியர் ஒருவர், தனது மனைவி மற்றும் சகோதரியை சுட்டு கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்து வேறுபாடு உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மானஸ் மிஸ்ரா (38 வயது). வங்கி ஊழியர். இவரது மனைவி திவ்யா மிஸ்ரா (37 வயது). இவரும் கோமதி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடமாக இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். சுட்டுக் கொலை இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 12.15 மணியளவில் திவ்யா பணிபுரியும் வங்கிக்கு வந்த மானஸ் மிஸ்ரா, அவரை வெளியே வருமாறு அழைத்துள்ளார். பின்னர் அங்கு வந்த திவ்யாவை அவர் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். தானும் தற்கொலை இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரது கணவரை தேடினர். இதற்கிடையே மானஸ் மிஸ்ரா ஹுசாரியா பகுதியில் உள்ள தனது வீட்டில், மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அவரது சகோதரி ஷீபா பாஜ்பாயை (28 வயது) சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தெரிய வந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடயவியல் குழுக்கள் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/india/bank-employee-kills-wife-sister-before-shooting-himself




