நெல்லை, கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு திருநெல்வேலி மாநகர பகுதியில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர், மணிமூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த கோபால் மகன் பொன்ராஜ் (வயது 26), வெள்ளப்பாண்டி மகன் மணிகண்டன்(23), பாலையா மகன் மகாராஜன்(28) ஆகிய 3 பேர் நெல்லை மாநகர பகுதியில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது அதன் காரணமாக மேற்சொன்ன 3 பேரும் தச்சநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின்பேரில், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி இன்று (29.9.2026) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/nellai-3-youths-arrested-under-the-prevention-of-gangsters-act-in-connection-with-murder-case




