சென்னை, விஜய்காந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து, தமிழக முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- புகழ் வணக்கம் மனிதநேயம், துணிச்சல், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அடையாளமாகக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்களைச் செலுத்துகிறேன். திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்ததோடு, அரசியலில் மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவராகவும் திகழ்ந்து, ஏழை, எளிய மக்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டு கொடையுள்ளத்தோடு உதவிய புரட்சிக் கலைஞரின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/may-the-fame-of-vijay-kanth-last-forever-chief-minister-vijay



