கிருஷ்ணகிரி, தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது55). இவர் ஒசூ ரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகி றார். இவர் தினமும் ஒசூருக்கு தனது வாகனத்தில் சென்று வந்து உள்ளார். இதையடுத்து கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிக்கு உட்பட்ட சாலைகளில் பராமரிப்பு தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரங்கள் பெற்றார். அதன் அடிப்படையில் சாலைகள் சரியாக பராமரிக்கப்பட வில்லை என கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் அவர் புகார் செய்தார். மாவட்ட நுகர் வோர் கோர்ட்டு நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வு இதை விசாரித்து வந்தது. இதையடுத்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வக்கீல் கமிஷனர் பிரியா கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்தார். விளக்கம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முன்னர் இருந்த ஒப்பந்ததாரருடன் இருந்த வழக்கு நிலுவை காரணமாக சாலை பராமரிப்பு தாமதமானதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதை நுகர்வோர் கோர்ட்டு ஏற்க மறுத்து, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் அதன் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனம் ஆகிய இரண்டும் இணைந்து அல்லது தனித்தனியாக பாதிக்கப்பட்ட புகார்தாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு மற்றும் ரூ.15 ஆயிரம் வழக்கு செலவும் வழங்க உத்தரவிட்டது. மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலை மேற்கோள் காட்டி கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ரூ.919.91 கோடி வருவாய் வசூலிக்கப்பட்ட போதிலும், சாலையை பாதுகாப்பாகவும், போக்குவரத்துக்கு தகுதியாகவும் பராமரிக்கவில்லை என கோர்ட்டு கூறியது. ரூ.1 கோடி அபராதம் அத்துடன் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் சந்திக்கும் மன உளைச்சலை கருத்தில் கொண்டு, ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தது. தொகையை தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தின் சட்ட உதவி நிதியத்திற்கு செலுத்துமாறும் உத்தரவிட்டது. மேலும் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்து குறைபாடுகளையும் 2 மாதத்திற்குள் சரி செய்யவும், விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் வழி ஒழுங்கு அறிகுறிகளை பொருத்துமாறும் தீர்ப்பில் கூறப் பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-1-crore-fine-imposed-on-krishnagiri-toll-plaza-contractor




