நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜூன் மாதத்தில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து, இந்த ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது என்று பதிவிட்டிருக்கிறார். நடிகை சமந்தா ரூத் பிரபு கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘சுபம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படமாகும். இதனைத் தொடர்ந்து, ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தை சமந்தா தயாரித்து, கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம், 1980-களின் பின்னணியில் குடும்பம் மற்றும் அதிரடியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தமிழில் இந்தப் படம் ‘எங்கள் தங்கம்’ என்கிற தலைப்பில் வெளியானது. சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ கடந்த மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கடந்த 4 தினங்களில் மட்டும் சுமார் ரூ.50 கோடி வரை வசூலித்திருக்கிறது. இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி இருக்கும் நிலையில், இதில் நடிப்பதற்காக சமந்தா எடுத்திருக்கும் ரிஸ்க் குறித்து அனைவரும் பேசி வருகின்றனர். ஐதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் சக்சஸ் மீட்டில் கர்ப்பமாக இருக்கும் தகவல்கள் சமந்தா பகிர்ந்து கொண்டார். நடிகர் நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, நீண்ட காலமாக தனிமையில் இருந்த சமந்தாவின் திருமணம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் இயக்குநர் ராஜ் நிதிமொருவுடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோரு தம்பதி, விரைவில் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் வெற்றி பெற்று வரும் நிலையில், கடந்த ஜூன் மாதத்தைப் பற்றி சமந்தா ஒரு பதிவை போட்டுள்ளார். நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜூன் மாதத்தில் எடுத்தப் புகைப்படங்கள் வீடியோக்களைப் பகிர்ந்து, இந்த ஜூன் மாதம் ஒரு தேவதைக் கதை போல இருந்தது என்று பதிவிட்டிருக்கிறார். கருவுற்றிருக்கும் நேரத்திலும் சமந்தா விடாமல் செய்யும் உடற்பயிற்சி வீடியோக்கள், கணவருடன் எடுத்துக் கொண்ட செல்பி, வீடியோக்களையும் பகிர்ந்து, இந்த ஜூன் மாதம் தேவதைக் கதை போல இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/june-month-was-like-a-fairy-tale-actress-samantha




