13 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய VIGO செயற்கைக்கோள், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி காலை 9.45 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் உயரத்தை நோக்கிப் பயணித்த இந்தச் செயற்கைக்கோள், சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டு, அதில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் ஆய்வுப் பொருள்கள் அடுத்தக்கட்ட ஆராய்ச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டன. இந்தத் திட்டத்தின் சிறப்பு, விண்வெளியில் பயணம் செய்வதுடன் முடிந்துவிடவில்லை. விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்பதே மாணவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. VIGO இந்தியாவிலேயே அதிகமாக வட இந்தியாவில் பயிர்களை பாதிக்கும் பூஞ்சைத் தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் வகையில் VIGO செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது. ஒரு பயிரில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதைக் கண்டறிவதை விட, தாக்குதலுக்கான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து விவசாயிகளுக்குத் தகவல் வழங்க முடிந்தால், மிகப்பெரிய அளவில் பயிர் சேதத்தைத் தடுக்க முடியும் என்பதே மாணவர்களின் எண்ணம். இதற்கு ஓர் எளிய உதாரணமாக, “காப்பான்” திரைப்படத்தில் காட்டப்பட்ட வெட்டுக்கிளி தாக்குதலைப்போல, பெருமளவில் பயிர்களை தாக்கக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம் என மாணவர்கள் விளக்குகின்றனர். மாணவர்கள் VIGO என்ற பெயருக்கும் தனிச்சிறப்பு உள்ளது. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பங்களித்த விஸ்வேஸ்வரன் மற்றும் ஜி.டி. நாயுடு ஆகியோரின் பெயர்களை இணைத்து VIGO என பெயரிடப்பட்டுள்ளது. மறக்கப்பட்டு வரும் அவர்களின் பெயர்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகவும் இந்தப் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 13 மாணவர்களைக் கொண்ட குழுவிற்கு பண்ணிரண்டாம் வகுப்பு மாணவர் விஷ்ணு ஒருங்கிணைப்பாளராக இருந்து, திட்டத்தை எளிமையாக எடுத்துரைப்பது உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொண்டார். மனோஜ் குமார், ரஷித் அகமது, பெபின் குமார், முத்துக்கருப்பன், ஹரிஸ்வர், ஹரிஹரன், முத்துகுமார், அபிமன்யு, சோமேஸ்வர், மிதுன், பாவேந்தன், ஆசிக் ரகுமான் போன்ற மாணவர்கள் VIGO திட்டத்தின் குழுவினர். மேலும், தற்போதைய முயற்சியில் பயன்படுத்தப்பட்ட பலூன் சுமார் மூன்று மணி நேரம் மட்டுமே செயல்பட்ட நிலையில், எதிர்காலத் திட்டத்தில் நீண்ட நாள்கள் விண்வெளியில் நிலைத்திருக்கக்கூடிய பலூன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வகத்தில் வைத்து ஆய்வு செய்து அறிக்கையாகத் தயார்செய்துள்ளனர். இந்தத் திட்டத்திற்கு SMNG நிறுவனம் 100 நாள்களுக்கும் மேலாக தங்களது நிறுவனத்தை இலவசமாகப் பயன்படுத்துவதற்கு வழங்கியதுடன், அதன் நிறுவனர் அப்துல் ஹய்யூம் ஆதரவளித்துள்ளார். Aero Launch Space India நிறுவனமும் செயற்கைக்கோள் ஏவுதலுக்கு உதவி செய்துள்ளது. காரைக்குடி அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் நேற்று (ஆகஸ்ட் 17) நடைபெற்ற 'பன்னாட்டு அறிவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப மாநாட்டில்', சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாசா விண்வெளி வீரர் மற்றும் விஞ்ஞானியான டாக்டர் டான் தாமஸ் (Dr. Don Thomas) அவர்களை, மாணவர்கள் நேரில் சந்தித்து உரையாடினர். இந்தச் சந்திப்பின்போது, கடந்த 2026 பிப்ரவரி 13-ஆம் தேதி 'VIGO Satellite-1' என்ற சிறிய ரக செயற்கைக்கோளைத் தாங்களே வடிவமைத்து விண்ணில் செலுத்தி வெற்றி கண்ட மாணவர்கள் விஷ்ணு மற்றும் அவர்கள் குழு, தங்கள் திறமையை விவரித்தனர். மாணவர்களின் இந்தச் சாதனையை அறிந்த நாசா விஞ்ஞானி டான் தாமஸ் வியப்பு கொண்டு மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைப் பாராட்டி, "அரசுப் பள்ளி மாணவர்களான உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியதுடன், எதிர்காலத்தில் மாணவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் உறுதியளித்தார். நாசா விஞ்ஞானி டான் தாமஸ் உடன் மாணவர்கள் மேலும் அதே நாளில் காணொளி வாயிலாக சந்திராயன் -1 திட்ட இயக்குநர் டாக்டர் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை மாணவர்களுடன் உரையாடினார். இதில் கிராமப்புறங்களில் உள்ள அடிப்படைப் பிரச்னைகளை களைந்து சமுதாயத்தை உயர்த்த, இன்றைய இளைஞர்கள் எப்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை மாணவர்களிடம் விளக்கினார். இந்த வெற்றியின் அடுத்த படியாக, VIGO Satellite-2 என்ற மிகப்பெரிய கனவுடன் மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கு டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை ஆலோசகராக இருந்து சாத்தியக்கூறுகளை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதுடன், 2027-ம் காரைக்குடியில் VIGO Satellite-2-ஐ விண்ணில் ஏவ உள்ளதாக மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/technology/proud-of-you-nasa-scientist-don-thomas-praises-karaikudi-govt-school-students




