சென்னை, தமிழ் சினிமாவின் வெற்றிப்படங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்படும் 'ரன்' திரைப்படம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ரீ-ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில், தற்போது புதிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் நாளை ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. 2002-ல் சூப்பர் ஹிட் அடித்த 'ரன்' இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ரன்'. காதல், ஆக்சன், குடும்ப உணர்வுகள் என அனைத்தையும் இணைத்து உருவான இப்படம் அப்போது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தயாரிப்பாளர் எ.எம். ரத்னம் தயாரித்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். குறிப்பாக, பாடல்கள், சண்டைக் காட்சிகள் மற்றும் மாதவன் - மீரா ஜாஸ்மின் ஜோடியின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், மீரா ஜாஸ்மின் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற இப்படம், 2002-ம் ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. மீண்டும் திரைக்கு வரும் 'ரன்' 'ரன்' திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரீ-ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அப்போது வெளியீடு நடைபெறவில்லை. இந்த நிலையில், தற்போது படம் வருகிற 10-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தக் கிளாசிக் திரைப்படத்தை, புதிய தலைமுறை ரசிகர்களும் பெரிய திரையில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரீ-ரிலீஸ் ஆகும் `ரன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்ட இந்த டிரெய்லர் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/trailer-released-for-the-re-release-of-the-movie-run




