இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 1,626 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை ஒரு ஆண்டு கால அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் ஆகும். இது குறித்து முழு விவரங்களை இங்கு காணலாம். கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு (+2), ஐடிஐ (ITI), டிப்ளமோ, பிஎஸ்சி, பிஏ, பிகாம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 30.06.2026 நிலவரப்படி கணக்கில் கொள்ளப்படும். அதன்படி குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 24-ஆகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். பயிற்சி மற்றும் உதவித்தொகை: தேர்வு செய்யப்படுவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். அப்ரண்டிஸ் சட்ட விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட மாத உதவித்தொகையும் வழங்கப்படும். தேர்வு முறை: மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தகுதிப் பட்டியல் (Merit List) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப்பது எப்படி: ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரபூர்வமான IOC இணையதளத்தில் மேலும் விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 28.07.2026 மாலை 05.00 மணி ஆகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/education-and-employment/jobs-at-a-central-government-oil-company-1626-vacancies-apply-immediately




