சென்னை, காலை உணவு திட்டம் கல்வி வளர்ச்சிக்காக, தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளிக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைப்பாட்டை தடுக்கவும், பள்ளி வருகையை அதிகரித்து. இடைநிற்றல் இல்லாத தொடர்ச்சியான கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் குழந்தைகளுக்காக கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 37 ஆயிரத்து 447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 19.34 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். பெருந்தலைவர் காமராஜர் பெயர் த.வெ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்த உணவு திட்டத்தின் பெயர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் என்று மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இதன் மூலம் கூடுதலாக 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவி கள் பயனடைவார்கள் என்றும் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். இந்த விரிவாக்க திட்டம் கடந்த 17-ந்தேதி அன்று பெரியார் பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட் டது. ஆனால், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் லண்டன் சென்றதால், திட்டத்தின் தொடக்க விழா 22-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தொடக்க விழா இந்த நிலையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய், சென்னை திருவான்மியூர் காந்திகிராமத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் சக்கரை பொங்கலை பரிமாறினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து முதல்-அமைச்சர் விஜய் உணவு சாப்பிட்டார். இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 44,984 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் 34 லட்சத்து 64 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள். இந்த திட்டத்துக்காக கூடுதலாக ரூ.217.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பட்டியல் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் (செங்கல்பட்டு), தாராபுரம் (திருப்பூர்) ஆகிய 2 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இந்த திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் உணவு பட்டியலில் திங்கட்கிழமை - உப்புமா, செவ்வாய்க்கிழமை- கிச்சடி, புதன்கிழமை - பொங்கல், வியாழக்கிழமை உப்புமா, வெள்ளிக்கிழமை - இனிப்பு வகை உணவு ஆகியவை இடம் பெற்றுள்ளன. காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்திடும் சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு கிடைப்பதை உறுதி செய்திட, தொடர்ச்சியாக கண்காணிக்குமாறும், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/breakfast-scheme-expansion-chief-minister-vijay-sat-and-ate-with-school-students




