“செம்மீன்” பட புகழ் பழம்பெரும் நடிகை ஷீலா தனக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சிலர் ஏமாற்றி அபகரித்து விட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 1960-70 காலகட்டங்களில் லெஜண்டரி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷீலா. செம்மீன் படத்தில் அவரது கருத்தம்மா கதாபாத்திரம் இந்திய அளவில் பிரபலமானது. பிரேம் நசீருடன் மட்டும் 107 படங்களில் இணைந்து நடித்து உலகிலேயே அதிக படங்களில் ஜோடியாக நடித்த நடிகர், நடிகை என்ற பெருமையை பெற்றனர். இவர் சிறந்த நடிகைக்கான கேரள மாநில அரசு விருதுகளையும், தேசிய விருதையும் வென்றுள்ளார் தற்போது தேர்வு செய்து படங்களில் நடித்து வரும் ஷீலா சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் இந்நிலையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- 5 ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டில் இருந்து ரூ.48 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டன. அப்போது என் வீட்டில் 5 பணிப்பெண்கள் இருந்தனர். 5 பேரில் ஒருவர்தான் நகைகளை திருடி இருக்க வேண்டும். மீதி 4 பேரும் நிரபராதிகள். ரூ.48 லட்சம் ரூபாயை நான் எப்படி சம்பாதித்தேன் என தெரியுமா? இன்று போல் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒரு கோடியோ, 2 கோடியோ நான் வாங்கவில்லை. எங்கள் சம்பளம் ஆயிரக்கணக்கில்தான் இருந்தது. பொதுவாக என் நகைகளை லாக்கரில் வைத்திருப்பேன். அப்போது திருமண காலமாக இருந்ததால் வெளியே வைத்திருந்தேன். நகை திருடப் பட்டதை அறிந்ததும் போலீசிடம் புகார் அளித்தேன். அவர்களிடம் காவல்துறை விசாரித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் மீது பரிதாபம் ஏற்பட்டு போலீசிடம் அவர்களை விட்டு விடுங்கள் என கூறினேன். 5 பேரும் நீண்ட நாட்களாக பணியாற்றி வருகிறார்கள். ஒருவரின் தவறுக்காக எல்லோரையும் தண்டிக்கக் கூடாது. மேலும் கோடிக்கணக்கான மதிப்புள்ள என் நிலம் மற்றவர்களால் விற்கப்பட்டது. நடிப்பதை நிறுத்தியபின் நான் வாங்கிய நிலத்தை போய் பார்த்த போது என் நிலத்தில் யாரோ வீடு கட்டி இருந்தனர். நான் சம்பா தித்ததை இழந்ததை நினைக்கும் போது இப்போதும் இவ்வாறு அவர் வலிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/cinema/cinemanews/they-have-snatched-my-land-chandramukhi-actress-sheela




