ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் உள்ள அடர்ந்த காடுகளில், தனித்துவமான குரல் ஒலி, 'இளஞ்சிவப்பு-ஆரஞ்சு' நிற உதடுகள் கொண்ட புதிய வகை குரங்கு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசின் டி.ஆர்.சி அடர்ந்த காடுகளில் ஒரு புதிய குரங்கு இனம் கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட 5-வது குரங்கு இனம் இதுவாகும். நவீன பிரைமேட் அறிவியல் வரலாற்றில் இது மிக அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது. புதிய குரங்கு இனத்திற்கு அறிவியல் பூர்வமாக கொலோபஸ் காங்கோயென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் இதனை "லிக்வேலி" என்று அழைக்கின்றனர். உடல் முழுவதும் பெரும்பாலும் கருப்பு நிறமாகவும், முகத்தைச் சுற்றி எடுப்பான ஆரஞ்சு நிறப் பட்டையுடனும் காணப்படுகிறது. இதன் நீண்ட வாலும், பளபளப்பான முடியும், பெரிய மடிந்த காதுகளும், வாலுக்கு அருகில் இருக்கும் வெளிர் நிற அடையாளங்களும் பிற கொலோபஸ் குரங்குகளிடமிருந்து இதனை எளிதாக வேறுபடுத்திக் காட்டுகின்றன. சுமார் 15 பவுண்டுகள் எடை கொண்ட இந்த குரங்கு, தன் நெருங்கிய பிற குரங்கு இனங்களை விட அளவில் சிறியதாகும். காங்கோ நாட்டின் பெயரைக் கொண்டு நேரடியாகப் பெயரிடப்பட்ட முதல் குரங்கு இனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/world/new-monkey-species-with-orange-lips-found-hiding-in-dr-congo-forest




