திருப்பூர் திருப்பூரில் நடந்த த.வெ.க. 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஆபரேஷன் சக்சஸ், அ.தி.மு.க. பேஷண்ட் டெட் என அமைச்சர் அருண்ராஜ் பேசினார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளை வென்று முதல் இடம் பிடித்தது. கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணி 73 தொகுதிகளில் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு சென்றதோடு, அ.தி.மு.க. கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆட்சியமைத்த த.வெ.க. இதனால், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத போதிலும் அதிக தொகுதிகளை வென்ற த.வெ.க.வுடன் காங்கிரஸ் கைகோர்த்தது. தொடர்ந்து, வி.சி.க., 2 கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்தது. மே 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று கொண்டார். சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் த.வெ.க. வெற்றி பெற்றது. பின்னர் அக்கட்சியின் முதல் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், த.வெ.க. ஆட்சி பொறுப்புக்கு வந்து 100 நாட்கள் ஆன சூழலில், இதுதொடர்பான சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை அக்கட்சி நடத்தி வருகிறது. இதன்படி, திருப்பூரில் நடந்த த.வெ.க.வின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு பேசினார். நகைச்சுவையாக ராகிங் அவர் பேசும்போது, சட்டசபையில் நம் மூத்த அண்ணன் செங்கோட்டையனின் பக்கத்தில்தான் நான் எப்போதும் அமர்ந்திருப்பேன். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் அந்த பக்கம் வரும்போது, அண்ணனை பார்த்து நகைச்சுவையாக ராகிங் செய்வது வழக்கம். நான் அண்ணனை பற்றி அடிக்கடி சொல்வதுண்டு. மருத்துவத்தில் நான் எப்படி ஒரு டாக்டரோ, அதேபோல அரசியலில் நமது அண்ணன் ஒரு அரசியல் டாக்டர். அரசியலில் என்ன பிரச்சினை, அ.தி.மு.க.வில் என்ன பிரச்சினை என துல்லியமாக கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சையை அளித்து, இறுதியில் 'ஆபரேஷன் சக்சஸ். அ.தி.மு.க. பேஷண்ட் டெட்' என்ற நிலைக்கு கொண்டு சென்று விட்டார் என பேசியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/operation-success-admk-patient-dead-minister-arunraj-speech




