தென்காசி தென்காசி அருகே ஆற்றுக்குள் அரசுப்பேருந்து கவிழ்ந்ததில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தென்காசி அருகே வேட்டைக்காரன் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது. 30 பயணிகள் இந்த விபத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த பயணிகள் பலர் அலறி கூச்சலிட்டனர். பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/government-bus-overturns-in-river-near-tenkasi-30-passengers-injured




